குளித்தலை அருகே 80 ஆண்டு பழமையான பாலத்தை எம்எல்ஏ ஆய்வு செய்தார்

குளித்தலை அருகே 80 ஆண்டு பழமையான பாலத்தை எம்எல்ஏ ஆய்வு செய்தார்
X

குளித்தலையில் 80 ஆண்டு பழமையான பாலத்தை பார்வையிடுகிறார் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம்

ரத்தினம்பிள்ளைபுதூர் கிராமத்தில் உள்ள சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தை எம்எல்ஏ இரா மாணிக்கம் ஆய்வு செய்தார்

குளித்தலை அருகே ரத்தினம் பிள்ளை புதூர் கிராமத்தில் உள்ள சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பழுதடைந்த பாலத்தை எம்எல்ஏ இரா மாணிக்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரண்டு பாசன வாய்க்கால் செல்கிறது, இந்த வாய்க்கால்களை கடப்பதற்காக கடந்த 1934ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் கல்பாலம் கட்டப்பட்டது, இந்தப் பாலத்தின் வழியாக ரத்தினம் பிள்ளை புதூர், கணக்கப்பிள்ளையூர், கருங்களாப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தினமும் பயன்படுத்தி வந்தனர். விவசாயப் பணிகளுக்கும், அவசர வேலைகளுக்கும் இவ்வழியாக செல்வது வழக்கம்.

தற்பொழுது இந்தப் பாலத்தின் கைபிடிச்சுவர் முழுவதும் பழுதடைந்தும் பாலத்தின் அடிப்பகுதியும் இடிந்து விழும் நிலையிலும் உள்ளது. இந்த பாலம் இடிந்து விழுந்தால் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலையும் உள்ளது.

தற்பொழுது இந்த பாலத்தில் செல்லும் கால்நடைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள், தவறி வாய்க்காலில் விழுவதாகவும் எனவே, உடனடியாக போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த பாலத்தை புதுப்பித்து தர மாணிக்கம் எம்எல்ஏ விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையடுத்து, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் இன்று இந்த பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அதிகாரிகளிடம், பாலத்தின் நிலை குறித்து ஆய்வு செய்து, புதிய பாலம் கட்டுவது குறித்து பரிந்துரைக்கும்படி அறிவுறுத்தினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்