கரூர் மாவட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் இணையவழி ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டத்தில்  தவ்ஹீத் ஜமாஅத்  இணையவழி ஆர்ப்பாட்டம்
X

கரூரில் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு இணையம் வழியாக ஆர்ப்பாட்டம் செய்தது.

கரூர் மாவட்டத்தில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில இணையம் வாயிலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லட்சத்தீவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மத்திய அரசின் அடக்குமுறையை கண்டித்து கரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இணையவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் மதர்சா மற்றும் மருத்துவ அணி செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த இணையவழி ஆர்ப்பாட்டத்தில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தங்களது இல்லங்களுக்கு முன் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் லட்சத்தீவில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவி விட்டுள்ள மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர் மேலும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள பிரபு கோடாவை திரும்பப் பெறவேண்டும் அமைதியான வாழ்க்கை வாழும் லட்சத்தீவு மக்களின் அமைதியை சீர்குலைத்த மத்திய அரசு கண்டனம் தெரிவித்தும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!