கரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்

கரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்
X

கரூரில் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

கரூரில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் 500 பேருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கபசுர குடிநீர் வழங்கியது.

கரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் களப்பணியில் உள்ள காவல் துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுரகுடிநீர் இன்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு. கரூரில் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் மதரஸா மற்றும் மருத்துவ அணி பிரிவு மாவட்ட தலைவர் ஜாகீர்உசேன் ஆகியோர் தலைமையில் 5 குழுவினர் கரூர் பேருந்து நிலையம், தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், கோவை புறவழிச்சாலை, வெங்கமேடு, உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று களப்பணியில் உள்ள காவலர்கள், தூய்மை பணியாளர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கினர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!