கரூர் மாவட்டம் கடவூரில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

கரூர் மாவட்டம் கடவூரில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
X

கரூர் மாவட்டம் கடவூரில் பொதுமக்களுக்கு  கபசுர குடிநீர் வழங்கப்பட்டது-

கரூர் மாவட்டம் கடவூரில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டம்,கடவூர் ஊராட்சி, ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்ட எல்லைப் பகுதியான கடவூர் ஊராட்சிக்குள்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் கிருமி நாசினி தெளித்து தெருக்கள் பராமரிக்கப்படுவதுடன், பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும், தடுப்பூசி செலுத்திக் கொள்றுமாறு பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்