கரூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை: தோகமலையில் அதிகபட்சமாக 70 மி.மீ பதிவு

கரூர் மாவட்டம் முழுவதும்  பலத்த மழை:  தோகமலையில் அதிகபட்சமாக 70 மி.மீ  பதிவு
X

கரூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையில் ஊர்ந்து செல்லும் கார்

கரூர் மாவட்டத்தில் 2 நாள்களாக நல்ல மழை பெய்து வருகிறது நேற்று தோகமலையில் அதிகபட்சமாக 70 மி.மீ மழை பதிவாகியுள்ளது

கரூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் 343 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தோகமலையில் அதிகபட்சமாக 70 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.நேற்றைய நிலவரப்படி தோகமலையில் அதிகபட்சமாக 70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதிலும் கரூரில் 22 மில்லி மீட்டரும் அரவக்குறிச்சியில் 15.5 மி.மீட்டரும், அணைபாளையத்தில் 19 மில்லிமீட்டரும், க.பரமத்தியில் 3 மில்லி மீட்டரும், குளித்தலையில் 22 மில்லி மீட்டரும், தோகமலையில் 70 மில்லி மீட்டரும், கிருஷ்ணராயபுரத்தில் 18 மில்லிமீட்டரும், மாயனூரில் 26 மில்லி மீட்டரும், பஞ்சப்பட்டியில் 27.4 மில்லி மீட்டரும், கடவூரில் 60 மில்லி மீட்டரும் பாலவிடுதியில் 23 மில்லி மீட்டரும், மயிலம்பட்டியில் 31 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு 343 மில்லிமீட்டர் சராசரியாக 28.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்னர் 40 மில்லி மீட்டர் பெய்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!