முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் உடல் நலக் குறைவால் காலமானார்

முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் உடல் நலக் குறைவால் காலமானார்
X

கரூரைச் சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலருமான பாப்பாசுந்தரம் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். கரூர் மாவட்டம் குளித்தலை இரணியமங்கலம் அருகேயுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர். 86 வயதான இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

எம்ஜிஆர் காலத்திய அதிமுக விசுவாசி. அதிமுக கட்சி துவங்கிய 1972 முதல் பல ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார், 2000 முதல் 2003 வரை கரூர் மாவட்ட செயலாளராகவும் 2002 முதல் 2003 வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், தொடர்ந்து மாவட்ட அவைத் தலைவராகவும் தற்பொழுது கழக அமைப்புச் செயலாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அணியில் குளித்தலை தொகுதியில் 1989ம் ஆண்டு சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

1991 முதல் 1996 வரை, 2001 முதல் 2006 வரை. 2011 முதல் 2016 வரை குளித்தலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக பதவி வகித்தவர்.தற்போது அதிமுக கழக அமைப்புச் செயலாளராக உள்ளார். 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார், கடந்த சில தினங்களுக்கு முன்னாள். வீட்டில் இருந்தபோது தவறி விழுந்த அடிபட்டது. திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!