கரூர் அருகே குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தந்தை மீட்பு: குழந்தைகள் உயிரிழப்பு

கரூர் அருகே குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தந்தை மீட்பு: குழந்தைகள்  உயிரிழப்பு

குடும்பத் தகராறில் இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்ததில் உயிருடன் மீட்கப்பட்ட தந்தை.

குடும்ப பிரச்னையில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குளித்தலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

குளித்தலை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இரு குழந்தைகளுடன் கிணற்றில் தந்தை குதித்ததில் இரு குழந்தைகள் உயிரிழந்தன. உயிர்தப்பிய தந்தையை தோகைமலை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை ஆதனுரைச்சேர்ந்த ஜேசிபி டிரைவர் முருகேசன் ( 30). தனது திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது, ருதுர்சிலாஸ்ரீ ( 4), கிருஷ்ணன் (2) ஆகிய இரு குழந்தைகளுடன் ஆதனூரில் வசித்து வருகின்றார். நேற்று இரவு முருகேசனுக்கும் அவரது மனைவி பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்த தனது இரு குழந்தைகளுடன் முருகேசன் இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்று விட்டார், கழுகுர் அ. உடையாப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தை ரோட்டில் நிறுத்திவிட்டு சாலையோரம் உள்ள 100 அடி ஆழமுள்ள கிணற்றில் முருகேசன் இரு குழந்தைகளுடன் குதித்தார்.

இன்று காலை கழுகூர் பகுதியில் சாலையில் வண்டி நின்றதை கண்ட மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர், தொடர்ந்து அப்பகுதியில் தேடி பார்த்த பொழுது கிணற்றில் இரு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கிடந்தனர். கிணற்று நீரில் முருகேசன் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து முசிறி தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த இரு குழந்தைகளையும், முருகேசனை உயிருடன் மீட்டனர். தோகைமலை போலீசார் முருகேசனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர், குடும்ப பிரச்னையில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குளித்தலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story