தொடர் மழை எதிரொலி: குளித்தலையில் 200 ஏக்கர் ஏரி நிரம்பியது

தொடர் மழை எதிரொலி: குளித்தலையில் 200 ஏக்கர் ஏரி நிரம்பியது
X

கூடலூரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ள ஏரி.

தொடர் மழையால் 200 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது. இதனால் 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த கூடலூரில் உள்ள 200 ஏக்கர் பரப்பளவு ஏறி தொடர் மழையால் நிரம்பி வழிகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் தோகைமலை அருகே உள்ள கூடலூரில் உள்ள இந்த ஏரி, நீர் முழுவதுமாக நிரம்பி வந்தது.

இன்று காலை ஏரி முழுவதும் நிரம்பி கடைக்கால் வழியாக மழைநீர் வழிந்து ஓடுகிறது. இதன் காரணத்தால் கூடலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள பேரூர் உடையாப்பட்டி, குன்னாகவுண்டன்பட்டி, சங்காயி பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள சுமார் ஐநூறு ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறும் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!