மது போதையில் வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மது போதையில் வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி  உயிரிழப்பு
X

கால்வாயில்  உயிரிழந்த குளித்தலை புது கோர்ட் தெருவைச் சேர்ந்த முஸ்தக் 

வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் மது போதையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது

குளித்தலை அருகே தென்கரை பாசன வாய்க்காலில் தொழிலாளி முஸ்தாக் (33) தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், குளித்தலை புது கோர்ட் தெருவைச் சேர்ந்த முஸ்தக் ( 33) . இவர் கரூரில் போட்டோ பிரேம் செய்யும் வேலை செய்து வருகிறார், நேற்று வீட்டிற்கு மது போதையில் வந்துவிட்டு வெளியில் சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில், இன்று காலையில் மாயனூரிலிருந்து குளித்தலை வழியாக செல்லும் தென்கரை பாசன வாய்க்காலில் குளித்தலை சபாபதி நாடார் தெரு அருகில் இறந்த நிலையில் முஸ்தக் கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலையடுத்து குளித்தலை போலீஸார் இறந்த முஸ்தக் உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

அவரது குடும்பத்தினர் இரவு குடிபோதையில் இருந்ததாகவும் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து, குளித்தலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த முஸ்தக்கிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!