கரூரில் காங்., பிரமுகர் கார் கடத்தல் : துரத்தி பிடித்த போலீசார்

கரூரில்  காங்., பிரமுகர் கார் கடத்தல் : துரத்தி பிடித்த போலீசார்
X

கரூரில் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் கார்.

கரூர் மாவட்டம், குளித்தலையில் காங்கிரஸ் பிரமுகர் கார் கடத்தபட்டது. போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

கரூர்:

கரூர் மாவட்டம் குளித்தலையில் காங்கிரஸ் பிரமுகரின் காரை கரூரில்மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தகவலறிந்த போலீசார் விரட்டிச் சென்று காரை தடுத்து நிறுத்திய போது திருடர்கள் இறங்கி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வளையப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.இவர் இன்று காலை தோட்டத்துக்கு சென்றிருந்தபோது, இரு மர்ம நபர்கள் வந்து வீட்டிலிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் அப்பா கார் எடுத்து வர கூறியதாக கூறி கார் சாவியை வாங்கி காரை எடுத்துச் சென்றுள்ளனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு வெங்கடாசலம் வீட்டிற்குச் சென்று பார்த்த பொழுது கார் இல்லை. மாற்றுத்திறனாளி பெண் நீங்கள் காரை எடுத்து வரக்கூறியதாக இரு நபர்கள் வந்து சாவி வாங்கி கார் எடுத்துச் சென்றனர் என கூறியுள்ளார்.

இதனால், தனது கார் திருடப்பட்டதை உணர்ந்த வெங்கடாஜலம் குளித்தலை காவல் நிலையத்திற்கு தகவல் புகார் அளித்துள்ளார். குளித்தலை போலீஸார் உடனடியாக பல்வேறு இடங்களிலும், காரின் அடையாளத்துடன் தேடினர். ரோந்து சென்ற பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, நச்சலூர் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் வெங்கடாசலத்தின் காரைஒட்டிச் செல்வதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் அந்த காரை விரட்டி சென்றுள்ளனர். போலீசார் பின் தொடர்வது குறித்த அறிந்த காரை திருடிய நபர்கள் நச்சலூர் பகுதியில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

குளித்தலை போலீஸார் காரை வீட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி மர்ம நபர்கள் குறித்து தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காணாமல் போய் ஒரு மணிநேரத்தில் காரை பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி