பெண்ணை தகாத வார்த்தையால் மிரட்டிய 3 பேர் மீது வழக்குப்பதிவு

பெண்ணை தகாத வார்த்தையால் மிரட்டிய 3 பேர் மீது  வழக்குப்பதிவு
X

பைல் படம்.

மங்காம்பட்டி பகுதியில் பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டிய 3 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் கள்ளை அடுத்த மங்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் மனைவி ராணி. விவசாய தொழில் செய்து வரும் இவர், அரசால் வழங்கப்பட்ட பட்டா இடத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் 21 ஆம் தேதி ராணியை அதே பகுதியைச் சேர்ந்த தேவன் மகன் சின்ன வழியான், மங்கான் மகன் தொட்டி என்கிற சின்ன வலியான், வைரன் மகன் மலையாண்டி ஆகிய 3 பேரும் ராணியை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியதாக ஏற்கனவே கடந்த வருடம் புகார் அளித்து சிஎஸ்ஆர் பெற்றுள்ளார். இதுகுறித்து தோகைமலை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!