/* */

லாலாபேட்டை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டலையடுத்து, மோப்ப நாய், வெடிகுண்டை கண்டறியும் கருவிகளுடன் போலீசார் சோதனை நடத்தினர்.

HIGHLIGHTS

லாலாபேட்டை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
X

லாலாபேட்டை ரயில் நிலைய தண்டவாளத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடும் போலீசார்.

கரூர் மாவட்டம் லாலாபேட்டை ரயில் நிலையம் அருகே பழமையான ரயில்வே கேட் உள்ளது. கரூர் - திருச்சி செல்லும் பிரதான சாலை இடையே இந்த ரயில்வே கேட் உள்ளதால், ரயில் வரும் நேரத்தில் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நிற்கும் நிலை இருந்தது. இதையடுத்து லாலாப்பேட்டையில் புறவழிச்சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ரயில்வே கேட் அருகே குகைவழிப்பாதை அமைத்த ரயில்வே நிர்வாகம், பழமையான லாலாபேட்டை ரயில்வே கேட்டை மூடிவிட்டனர். இதனால், பொதுமக்கள் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் புறவழி சாலையில் செல்லுமாறும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வழக்கம்போல பழைய ரயில்வே கேட் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் இல்லையென்றால் ரயில்வே நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மொட்டை கடிதம் லாலாபேட்டை ரயில் நிலையத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கரூர் ரயில்வே போலீசார் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ரயில் நிலையம், ரயில் பாதை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து மொட்டை கடிதம் எழுதிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Updated On: 19 Nov 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?