குளித்தலை: சிலம்பக்கலைப்பயிற்சி முடித்தவர்களுக்கு தகுதிப்பட்டை வழங்கல்

குளித்தலை: சிலம்பக்கலைப்பயிற்சி முடித்தவர்களுக்கு தகுதிப்பட்டை வழங்கல்
X

கரூரில. சிலம்ப. கலையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதல்களை வழங்கும் எம்எல்ஏ மாணிக்கம்.

சிலம்பாட்ட கலைக்கு அரசு மூலம் கிடைக்கும் அனைத்து உதவிகளையும் பெற்று தருவேன் என எம்எல்ஏ- இரா. மாணிக்கம் உறுதியளித்தார்

சிலம்பாட்டக்கலைக்கு அரசின் அனைத்து உதவிகளையும் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக குளித்தலை எம்எல்ஏ இரா. மாணிக்கம் தெரிவித்தார்.

குளித்தலை கடம்பர்கோவில் பகுதியில் பஞ்சபூதர் சர்வதேச தற்காப்புக்கலை கழகத்தின் சார்பாக சிலம்பத்தில் தகுதிப்பட்டை வழங்கும் விழாவில், சிறப்பு விருந்தினர்களாக குளித்தலை எம்எல்ஏ இரா மாணிக்கம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோர் பங்கேற்று, சிலப்பப்பயிற்சி முடித்த மாணவ,மாணவிகளுக்கு தகுதிபட்டை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர்.

இதில், எம்எல்ஏ மாணிக்கம் பேசுகையில், தமிழகத்தில் பாரம்பரிய கிராமபுற கலைகளில் ஒன்றான சிலம்பாட்ட கலை அழிந்து வரும் நிலையில் ,குளித்தலை, கடம்பர் கோவில் ஆற்றுப் பகுதியில் பஞ்சபூத சர்வதேச தற்காப்புக்கலை கழகத்தின் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளிடையே தற்காப்புக் கலையை பயிற்சி அளித்து வளர்த்து வரும் கரூர் மாவட்ட தலைமை பயிற்சியாளர் கதிரேசனின் சேவை பாராட்டுக்குரியது. சிலம்பாட்ட கலைகளுக்கு அரசு மூலம் கிடைக்கும் அனைத்து உதவிகளையும் பெற்று தருவேன் என்றார் அவர்.

இதில், சிலம்பாட்டம், சுருள் வாள், இரட்டை சுருள் வாள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் தேர்ச்சி பெற்ற சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தகுதிபட்டை மற்றும் சான்றுகள், பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதையொட்டி, மாணவிகள் சிலம்பாட்டத்தில் பெற்ற பயிற்சிகளை, பார்வையாளர்கள் முன்னிலையில் செய்து காட்டி அனைவரையும் அசத்தினர்..

நிகழ்ச்சியில், டிஎஸ்பி பொறுப்பு சக்திவேல், குளித்தலை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் நாவுக்கரசன், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காந்திமதி மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்