செக் மோசடி வழக்கில் திமுக எம்.எல்.ஏ.விற்கு பிடிவாரண்ட்

செக் மோசடி வழக்கில் திமுக எம்.எல்.ஏ.விற்கு பிடிவாரண்ட்
X

குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செக் மோசடி வழக்கில் குளித்தலை திமுக எம்எல்ஏவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் : செக் மோசடி வழக்கு குளித்தலை திமுக எம்.எல்.ஏ வுக்கு பிடிவாரண்ட்

திமுக எம்எல்ஏ ஒருவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செக் மோசடி வழக்கில் குளித்தலை திமுக எம்எல்ஏவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாணிக்கம். திமுகவை சேர்ந்த இவர் மீது செக் மோசடி வழக்கு ஒன்று கரூர் நீதி மன்றத்தில் விசாரணை நடை பெற்று வருகிறது. இந்நிலையில், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செக் மோசடி வழக்கு தொடர்பாக ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் எம்எல்ஏ மாணிக்கம் ஆஜராகாததால், கரூர் விரைவு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்