அய்யர்மலை ரோப்கார் திட்டம் -அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
குளித்தலையில் உள்ள அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரோப்கார் திட்டப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் 2011ஆம் ஆண்டு ரோப்கார் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் சில காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகள் 2016ம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது. சுமார் 7 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பெயரில் அய்யர் மலை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் 7கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் ரோப் கார் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்துள்ளோம்,
பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து விரைவாக பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், பணிகள் குறித்து 15நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் தாகவும் தெரிவித்தார். மேலும் குளித்தலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் நிரந்தர புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டர் ஆவணம் செய்தால் இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டு இடம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர் குமரகுருபரன், கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu