அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
X

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் சுரும்பார்குழலில் கோவில்  தேரோட்டம் நடந்தது.

கரூர் மாவட்டம் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மிக சிறப்பாக நடந்தது.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர்மலை அருள்மிகு சுரும்பார் குழலி அம்பிகை உடனாய ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா மற்றும் தேரோட்ட நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப்பின் நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ரத்தினகிரீஸ்வரர் - சுரும்பார்குழலி அம்பாள் எழுந்தருளினார்கள். தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!