குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பிரசார வாகனம்; ஆட்சியர் துவக்கி வைப்பு

கரூரில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் ஒழிப்பு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைக்கிறார் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.
கரூரில் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் மற்றும் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சைக்கோ அறக்கட்டளை சார்பில், மாவட்டம் முழுவதும் 5 நாள்களுக்கு கரூர், அரவக்குறிச்சி, கடவூர், தோகைமலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள தலா 30 கிராமங்களில் 19 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் முன்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதன்மூலம், கரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் தடுத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ், சைகோ அறக்கட்டளை இயக்குனர் கிருஷ்துராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu