ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 47 லட்சத்துக்கு வேளாண் பொருள்கள் விற்பனை

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 47 லட்சத்துக்கு வேளாண் பொருள்கள் விற்பனை
X

மாதிரி படம்

கரூர் மாவட்ட சாலைப்புதூர் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 47 லட்சத்துக்கு வேளாண் விளை பொருள்கள் விற்பனையானது

கரூர் மாவட்ட எல்லையில் உள்ள சாலைப்புதூர் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த வாரம் நடந்த ஏலத்தில் வேளாண் பொருட்கள் ரூ.47 லட்சத்து 55ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

சாலைப்புதூரில் செயல்பட்டு வரும் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொடுமுடி மற்றும் கரூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

இங்கு நடைபெறும் ஏலத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், எண்ணைய் நிறுவன.முகவர்கள் கலந்துகொண்டு ஏல முறையில் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

அதன்படி, நடைபெற்ற ஏலத்தில் 83.74 குவிண்டால் எடைகொண்ட 25, 562 தேங்காய்கள் வரத்தானது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.29.10ம், குறைந்த விலையாக ரூ. 23.65ம், சராசரி விலையாக ரூ.28.50ம் என்று ரூ. 2 லட்சத்து 17ஆயிரத்து 87க்கு விற்பனையானது.

அதேபோல் 400.81குவிண்டால் எடைகொண்ட 884 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தானது. இதில் முதல் தரம் கிலோ ஒன்று அதிக விலையாக ரூ. 107.80ம், குறைந்த விலையாக ரூ. 103.80ம், சராசரி விலையாக ரூ.107.40ம், இரண்டாம் தரம் கிலோ ஒன்று அதிக விலையாக ரூ.105.80ம், குறைந்த விலையாக ரூ. 73.80ம், சராசரி விலையாக ரூ.96.60ம் என்று ரூ.40லட்சத்து 32ஆயிரத்து 355க்கு விற்பனையானது.

அதேபோல் 61.20குவிண்டால் எடை கொண்ட 82மூட்டை எள் வரத்தானது. இதில் சிவப்பு ரகம் கிலோ ஒன்று அதிக விலையாக ரூ. 99.59ம், குறைந்த விலையாக ரூ. 70.09ம், சராசரி விலையாக ரூ. 86.89ம், என்று ரூ.5 லட்சத்து 5 ஆயிரத்து 677க்கு விற்பனையானது.

ஒட்டு மொத்தமாக இந்தவாரம் நடந்த ஏலத்தில் வேளாண் பொருட்கள் ரூ.47 லட்சத்து 55ஆயிரத்து 119க்கு விற்பனை ஆனது.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....