கரூரில் 75 வது சுதந்திர தினத்தையொட்டி 75 நிமிட இசை சாதனை நிகழ்ச்சி

கரூரில் 75 வது சுதந்திர தினத்தையொட்டி 75 நிமிட இசை சாதனை நிகழ்ச்சி
X

கரூரில் 75 வது சுதந்திர தினத்தையொட்டி 75 நிமிட நேரம் தவில், நாகசுரம், பறை இசை விழா சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூரில் 75 வது சுதந்திர தினத்தையொட்டி 75 நிமிட நேரம் தவில், நாகசுரம், பறை இசை விழா சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டையில் பீனிக்ஸ் உலக சாதனை புத்தகம், கிராமிய புதல்வன் அகாடமி இணைந்து 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு தவில், நாதஸ்வரம், பறை, பம்பை உருமி கலைஞர்களை கொண்டு 75 நிமிடம் தொடர்ந்து இசைத்து உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே லாலாப்பேட்டை பகுதியில் பீனிக்ஸ் உலக சாதனை புத்தகம் மற்றும் கிராமிய புதல்வன் அகடாமி இணைந்து நடத்தும் 75 ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமிய கலைகளை மேம்படுத்தும் வகையில் கிராமியக் கலைஞர்களுக்கு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் 75 தவில், நாதஸ்வரம், பறை, பம்பை உரிமை கலைஞர்களை வைத்து 75 நிமிடம் தொடர்ந்து இசைத்து உலக சாதனை படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கிராமிய புதல்வன் அகாடமியின் உறுப்பினர்கள், பொதுமக்கள், இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சி லாலாபேட்டை மக்களை மிகவும் மகிழ்வடையை செய்தது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil