நீரஜ் என்ற பெயர் உள்ளவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்: கரூரில் அறிவிப்பு

நீரஜ் என்ற பெயர் உள்ளவர்களுக்கு  2 லிட்டர் பெட்ரோல் இலவசம்: கரூரில் அறிவிப்பு

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ்சோப்ரா பெயர் வைத்திருந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் அறிவிப்பு.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிக்க நீரஜ் சோப்ரா என பெயர் வைத்திருந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்.

ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பெயர் வைத்திருப்பவர்களுக்கு கரூரில் உள்ள ஓரு பெட்ரோல் பங்கில் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் திருமாநிலையூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரவிந்த் ஏஜென்சி என்னும் பெட்ரோல் நிரப்பும் மையத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை சிறப்பிக்கும் வகையில் நீரஜ் என்ற பெயர் உள்ளவர்கள் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

இத்திட்டமானது, ஒருவார காலத்திற்கு செயல்படுத்த உள்ளதாக அரவிந்த் ஏஜென்சிஸ் எனும் பெட்ரோல் நிரப்பும் மையத்தின் உரிமையாளர் முன்னாள் எம்எல்ஏ மலையப்பசாமி தெரிவித்தார்.

மேலும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரருக்கு சிறப்பு செய்யும் வகையிலும் இத்திட்டத்தை அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story