குளித்தலையில் ரூ 2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் துவக்கம்

குளித்தலையில் ரூ 2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் துவக்கம்
X

பூமி புஜையில் கலந்து கொண்ட அதிமுக, திமுக நிர்வாகிகள்.

மருதூர், நங்கவரம் பேரூராட்சிகளில் 2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு குளித்தலை எம்எல்ஏ பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் மற்றும் நங்கவரம் பேரூராட்சி பகுதிகளில் ரூ.2.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் மருதுர் பேரூராட்சியில் மேட்டு மருதூர் பணிக்கம்பட்டி புது காலனி பகுதியில் 1.58 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கும், ரூ.2 லட்சம் மதிப்பில் குப்பு ரெட்டிப்பட்டி, கருங்கல்பட்டி குளத்தினை மேம்படுத்தல், ரூ.7 லட்சம் மதிப்பில் பனிக்கம்பட்டியிலிருந்து குடிநீர் குழாயை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கு குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பூமி பூஜை என்ற பணிகளை துவக்கி வைத்தார். அதேபோல் நங்கவரம் பேரூராட்சியில் கோவிந்தனூர், மேல் நங்கவரம் உள்ள 2 காலணி பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்லும் பாதைக்கு ரூ.58 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கும், மாடு விழுந்தான் பாறையில் ரூபாய் 12 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் விரிவாக்கப் பணிகளுக்கு எம்எல்ஏ பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார். அப்போது திமுக குளித்தலை ஒன்றிய செயலாளர் சந்திரன், மருதூர் நங்கவரம் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!