தாய் அடித்து கொலை: தப்பியோடிய மகனுக்கு போலீசார் வலை

தாய் அடித்து கொலை: தப்பியோடிய மகனுக்கு போலீசார் வலை
X

பைல் படம்.

பாலவிடுதி அருகே குடும்ப பிரச்னையில் தாயை கொன்றுவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் கடவூர் அருகே பாலவிடுதி காவல் சரகத்திற்கு உட்பட்ட கிழக்கு அய்யம்பாளையம் தெற்கு பள்ளத்தில் பாப்பாத்தி என்ற மூதாட்டி வசித்து வந்தார். பாப்பாத்திக்கு, பழனியம்மாள், தங்கமணி ஆகிய மகள்களும் முருகன், காமராஜ், கேசவன் ஆகிய மகன்களும் உள்ளனர். சகோதர, சகோதரிகள் 4 பேருக்கும் திருமணமாகிவிட , கடைசி மகன் கேசவனுடன் பாப்பாத்தி வசித்து வந்தார். கேசவனுக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், தனது தாயிடம் சொத்து, குறித்தும் திருமணம் செய்து வைக்கவில்லை என தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த கேசவன் பாப்பாத்தியை அடித்து கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார். தகவலறிந்த பாலவிடுதி ஆவல் நிலையப் போலீசார் பாப்பாத்தி சடலத்தை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள கேசவனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!