கரூரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது
கரூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள முகாம் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு அமரவைக்கப்பட்டுள்ள பொதுமக்கள்.
கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி, நேற்று தொடங்கி நடைபெறுகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கு டோக்கன் வழங்ப்ப்பட்டு அதனடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பலருக்கும் டோக்கன கிடைக்கவில்லை என குற்றம் சாட்டினர். தடுப்பூசி செலுத்தும் இடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பல இடங்களில் போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தி வந்தனர்.
இன்று தடுப்பூசி முகாம் கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவிந்தம் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம்,குளித்தலை நகர ஆரம்ப சுகாதார நிலையம் என 14 மையங்களில் 4,800 தடுப்பூசி போடும் பணி துவங்கியது.
தடுப்பூசி போடுவதற்கு பெண்கள்,ஆண்கள் என காலை முதலே ஏராளமானோர் குவிந்தனர்,பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றாலும் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், ஒதுக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப முகாமுக்குள் அனுமதிக்கப்பட்டு அமரவைத்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.இதனால் தேவையற்ற குழப்பம் இல்லாமல் இன்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu