கரூரில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பூசி: கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

கரூரில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பூசி: கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
X

கரூரில்  திருநங்கைகளுக்கு நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூரில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பபூசி செலுத்தும் பணி கலெக்டர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூரில் திருநங்கைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிரபு சங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு என்ற இருவகையான தடுப்பூசிகள் மத்திய - மாநில அரசுகள் சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கரூரில் உள்ள திருநங்கைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரூர் சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள கிராமியம் தொண்டு நிறுவனத்தில் 100 திருநங்கைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த சிறப்பு முகாமை கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிரபு சங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டு திருநங்கைகளை நலம் விசாரித்து, அவர்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

கரூர் மாவட்டத்தில் இன்று 17 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!