/* */

கரூரில் வாக்கு எண்ணிக்கை உஷார் எம்எல்ஏ செந்தில்பாலாஜி எச்சரிக்கை

ஒரு மாத தேர்தல் பரப்புரை உழைப்பை விட வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு நாளில் உழைப்பு முக்கியமானது என எம்எல்ஏ செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

HIGHLIGHTS

கரூரில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக மாவட்டச் செயலாளரும் அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர், அப்போது வரும் இரண்டாம் தேதி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் எம்எல்ஏ செந்தில்பாலாஜி பேசுகையில், ஒரு மாத கால தேர்தல் பரப்புரை உழைப்பை விட வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு நாளில் உழைப்பு முக்கியமானது. அந்த நாளின் உழைப்பும் புத்திசாலித்தனம் தான் வெற்றிக்கு இட்டுச் செல்லும் என பேசினார்.

கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் போது ஆதரவு அளித்த அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தும், கொரோனா காலத்தில் மக்கள் இக்கட்டான சூழலில் உள்ள நிலையில், கரூர் நகராட்சி வீட்டு வரி, சொத்து வரி தண்ணீர் வரி உள்ளிட்ட வரிகளை வசூல் செய்ய கெடுபிடி செய்து வருகிறது.

வரி கட்டாத வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் வரி வசூலை நிறுத்திவைக்க வேண்டும் எனவும், கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா சூழ்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது எனவே மாவட்ட மக்களுக்கு அனைவருக்கும் தேவையான தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளை மருத்துவத்துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 24 April 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு