/* */

கரூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் வினியோகம்: கலெக்டர் பிரபுசங்கர் உறுதி

கரூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் வினியோகம் நடப்பதற்கு கலெக்டர் பிரபுசங்கர் உறுதி அளித்துள்ளார்.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் வினியோகம்: கலெக்டர் பிரபுசங்கர் உறுதி
X

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சீரான குடிநீர் வினியோகம் தொடர்பான ஆய்வு கூட்டம் ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது.

கரூர் மாவட்ட துறை சார்ந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சீரான குடிநீர் வினியோகம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் பேசும் போது, கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் அளிப்பதை துறை சார்ந்த அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளும் போதும், மின் வாரிய பணியாளர்கள் மின் கம்பங்களை இடம் மாற்றம் செய்யும் போதும், கண்ணாடி இலை கேபிள் அமைக்கும் பணி மேற் கொள்ளும் போது சாலையோரங்களில் மற்றும் பிற இடங்களில் குடிநீர் குழாய்கள் செல்லும் பாதைகள் உள்ளனவா என்பதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் உறுதி செய்து சேதப்படுத்தாமல் பிற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணியின் போது ஏற்படும் சேதங்களை அந்த துறையினரே உடனடியாக சரி செய்து கொடுக்க நட டிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கு சம்பந்தப்பட்டதுறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அன்புமணி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவிக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் லலிதா, தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Jun 2023 8:03 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...