கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தமிழக அரசின் புகைப்பட கண்காட்சி

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தமிழக அரசின் புகைப்பட கண்காட்சி
X

கரூர் புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் கலெக்டர் தங்கவேல் இன்று துவக்கி வைத்தார். எம்.எல்.ஏக்கள் இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாவட்ட எஸ்.பி. முனைவர் பிரபாகர், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் கலெக்டர் தங்கவேல் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்கான எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் கரூர் மாவட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000/- வீதம் 1,69.729 இலட்சம் மகளிருக்கு உதவித்தொகையும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 705 பள்ளிகளில் பயிலும் 25.474 மாணாக்கர்களுக்கு காலை உணவும் வழங்கப்படுகிறது.

மேலும், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் 7.0093.326 மகளிர் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000/- வீதம் 2.73 இலட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 24,468 மாணவ, மாணவிகளுக்கு திறன் பயிற்சிகளும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில் 5 வகையான நோய்கள் கண்டறியப்பட்டு, 3.22.587 நபர்களுக்கு சிகிச்சைகளும், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மூலம் 5,090 நபர்களுக்கு ரூ. 3.55 கோடி செலவில் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர் என்றார்.

வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். 2 வது மண்டலக் குழுத் தலைவர் அன்பரசன், 32 வது மாமன்ற உறுப்பினர் நிவேதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்