கரூரில் ரோந்து காவல் பிரிவு: மத்திய மண்டல காவல் துணை தலைவர் தொடங்கி வைப்பு

கரூரில் ரோந்து காவல் பிரிவு: மத்திய மண்டல காவல் துணை தலைவர் தொடங்கி வைப்பு
X

24 மணி நேர ரோந்து காவலர்கள் பணியை மத்திய மண்டல காவல் துணைத் தலைவர் சரவணன் சுந்தர் தொடங்கி வைக்கிறார்.

ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருபத்தி நான்கு மணி நேரமும் ரோந்து செல்லும் காவலர் பிரிவு தொடங்கப்பட்டது.

காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து செல்லும் வகையில் ஒரு காவல் நிலையத்திற்கு ஆறு காவலர் வீதம் 24 மணி நேரமும் காவல் ரோந்து செல்லும் சேவை பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இந்த பிரிவின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. மத்திய மண்டல காவல்துறை துணைத் தலைவர் சரவணன் சுந்தர் இந்த ரோந்து காவலர் சேவையை துவக்கி வைத்து பேசுகையில், 24 மணி நேரமும் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களிடையே போலீசார் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்க வேண்டும்.

அதுபோல பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முயல வேண்டும். காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏதேனும் ஒரு இடத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அந்த இடத்திற்கு காரில் சென்று அங்கு பிரச்சனையின் தீவிரத்தை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெளிப்பதன் மூலம் பிரச்சனையை தீர்த்து வைக்கலாம் என கேட்டுக் கொண்டார்.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Tags

Next Story