கரூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா

கரூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா
X

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக அலுவலகம் (கோப்பு படம்).

கரூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா நாளை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949 ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழக குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்/சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை/சேவை நிறுவனங்களை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

கருர் கிளை அலுவலகத்தில் (முகவரி . 66/1 செங்குந்தபுரம் 5 ஆவது கிராஸ், கரூர் -639002. )குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெற உள்ளது. மேலும் 20.08.2024 11.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டஆட்சியர் தலைமையில் சிறப்பு தொழில் கடன் முகாம் சிறப்புக் கூட்டம் நடைபெற இருக்கின்றது.

இச்சிறப்பு தொழில் கடன் விழாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக கழகத்தின் (TIIC) பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதனமானியம் ) வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.75.00 லட்சம் வரை மற்றும் மாநில முதலீட்டு மானியமாக 25% இயந்திரங்களின் மதிப்பீட்டில் அதிகபட்சம் ரூ. 150.00 லட்சம் வரை இந்த சிறப்புதொழில் முகாமில் வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% விழுக்காடு சலுகை அளிக்கப்படும். NEEDS திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த அரியவாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு 04324-235581 மற்றும் 04324-232299 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!