கரூர் ரயில் பாதையில் தென்னக ரயில்வே மேலாளர் கெளதம் சீனிவாசன் ஆய்வு

கரூர் ரயில் பாதையில் தென்னக ரயில்வே மேலாளர் கெளதம் சீனிவாசன் ஆய்வு
X

ஆய்வு மேற்கொண்ட தென்னக ரயில்வே மேனேஜர்.

ஈரோடு முதல் திருச்சி வரையிலும், திருச்சி முதல் சேலம் வரையிலும் கரூர் வழியாக சிறப்பு ரயில் மூலம் ஆய்வு.

ஈரோடு முதல் திருச்சி வரை செல்லும் ரயில்பாதை, திண்டுக்கல் முதல் சேலம் வரை செல்லும் ரயில் பாதை, கரூர் ரயில் நிலையம் வழியாக செல்கிறது. இதன் வழியாக தென் மாவட்டங்களில் இருந்து வட மாவட்டத்திற்கும், வட மாநிலத்திற்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையம் கரூர் என்பதால், மாதம் தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளும் பணிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்தப் பணிகள் ரயில்வே உயர் அதிகாரிகள் தலைமையில் நடைபெறுவது வழக்கம். இந்த வரிசையில் இன்று சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கெளதம் சீனிவாசன் தலைமையில், தொழில் நுட்ப அதிகாரிகளுடன் சிறப்பு ரயில் மூலம் ரயில் பாதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை ஈரோட்டில் துவங்கிய இந்த ஆய்வு இன்று காலை 10.30 மணியளவில் கரூர் வழியாக திருச்சி சென்றனர்.

மீண்டும், திருச்சியில் துவங்கும் இந்த ஆய்வு கரூர் வந்து, கரூரிலிருந்து சேலம் வரை ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் துவங்கியுள்ளது. இந்த ஆய்வின்போது சிறப்பு ரயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு ரயில் பாதை முழுவதுமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரயில் பாதை மற்றும் அதில் உள்ள பாலங்கள், ரயில் பாதையை கடக்கும் மேம்பாலங்கள் என பல தகவல்கள் திரட்டப்படுவதுடன், துறை வல்லுநர்கள் குழுவுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!