சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் மருத்துவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் மருத்துவர் கைது
X

பைல் படம்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவரை கரூர் கிளை சிறையில் அடைத்த போலீசார்.

கரூர் நகரத்தில் உள்ளது ஜிசி மருத்துவமனை. இதன் மருத்துவராக டாக்டர் ரஜினிகாந்த் உள்ளார். இந்த மருத்துவமனையில் கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். தீபாவளிக்கு போனஸ் வழங்கப்படாததால், அந்த பெண்மணி வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 14 ம் தேதி மருத்துவமனை மேலாளர் சரவணன் அந்த பெண்ணின் 17 வயது சிறிமியை போனில் தொடர்பு கொண்டு மருத்துவர் ரஜினிகாந்த் அழைத்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து, 17 வயது சிறுமி மருத்துவமனைக்கு தனியாகச் சென்றதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் தனி அறையில் மருத்துவர் ரஜினிகாந்த் அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்துக் கொண்டு அவரின் தாயார் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனடிப்படையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்த டாக்டர் ரஜினிகாந்த் அதற்கு உடந்தையாக இருந்த மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதையடுத்து டாக்டர் ராஜினிகாந்த் தலைமறைவாகி விட்டார். மருத்துவமனையின் மேலாளர் சரவணனை உடனடியாக கைது செய்யப்பட்டார்

தலைமறைவாக இருந்த மருத்துவரை கைது செய்ய துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கோவையில் பதுங்கியிருந்த டாக்டர் ரஜினிகாந்த்தை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இதையடுத்து, கரூர் கொண்டு வரப்பட்டு கரூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி நசீமா பானு அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!