கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கினார்
கரூரில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கரூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
கரூர் மாநகராட்சியில் 90 மையங்களும், குளித்தலை, பள்ளப்பட்டி, புகலூர் நகராட்சிகளில் 35 மையங்களும், பேரூராட்சி பகுதியில் 71 மையங்களும், கிராமப்புறங்களில் 619 மையங்களும், 10 நடமாடும் மருத்துவக் குழு என மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 825 மையங்களில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.
கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சொட்டு நீர் வழங்கும் பணியில் கிராம சுகாதார செவிலியர்கள், ஊட்டச்சத்து பணியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த 3 ஆயிரத்து 384 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட அளவில் 10 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பொது இடங்களான பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தொடர்ந்து 24 மணி நேரமும் மூன்று நாட்களுக்கு முகாம் நடைபெறுகிறது.
கரூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 6 ஆயிரத்து 517 குழந்தைகள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் இடம் பெயர்வோர், வெளிமாநிலங்களில் இருந்து கட்டுமானப் பணிகள் மற்றும் இதர பணிகளுக்காக தற்காலிகமாக குடியமர்ந்தோர் தங்கியுள்ள பகுதியில் உள்ள குழந்தைகளுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் அமைந்துள்ள குழந்தைகளுக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும், ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் கூடுதல் தவணையை அனைத்து குழந்தைகளுக்கும் முழுமையாக சொட்டு மருந்து வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu