நிர்வாகிகளிடம் நேர்காணலை தொடங்கிய கரூர் மாவட்ட பாஜக

நிர்வாகிகளிடம் நேர்காணலை  தொடங்கிய கரூர் மாவட்ட பாஜக
X

 கரூர் பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில்  நேர்காணல் நடைபெற்றது

கரூர் மாவட்ட அளவில் கரூர் மாநகராட்சி, மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் உள்ளன

தமிழக அளவில் நகர் அமைப்புக் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் எங்கும், அதிமுக திமுக மற்றும் பாஜக கட்சிகள் மும்முரமாக தேர்தல் வேலைகள் பணியாற்றி வருகின்றன.

திமுகவைப் பொறுத்த அளவில் இரண்டு தினங்களுக்கு முன்பே நேர்காணலை நடத்தியது. இந்நிலையில், கரூர் மாவட்ட அளவில் கரூர் மாநகராட்சி, மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் உள்ள நிலையில், அதற்காக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தாக்கல் செய்தனர்.

இவர்களுக்கான நேர்காணல் கரூர் பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏற்கெனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு வழங்கியவர்கள் கலந்து கொண்டனர். தேர்தலில் வாக்குகளை சேகரித்து பாரதிய ஜனதா கட்சி பெரும் அளவில் வெற்றி பெற ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!