அருங்காட்சியத்தில் வைக்க அரிய பொருட்களை வழங்க கரூர் ஆட்சியர் வேண்டுகோள்
கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
சென்னை அருங்காட்சியத்தில் வைப்பதற்கு அரிய பொருட்களை வழங்கும்படி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வேண்டுகோள் எடுத்துள்ளார்.
இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் தியாகத்தையும். பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தனது 75 வது சுதந்திர தின உரையின் போது அறிவித்தார்.
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரையின் எதிரில் பாரம்பரிய கட்டடமான ஹூமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் மிகப்பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது.
பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள். கையெழுத்துபிரதிகள் செய்திதாள்கள், இராட்டைகள். பட்டையங்கள், ஐ.என்.டி.சீருடைகள், தபால்தலைகள் மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற பொருட்கள் தங்களிடம் இருந்தால் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கலாம்.
பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள அரியப் பொருட்களை சென்னை அல்லது கரூர் அரசு அருங்காட்சியகத்தில் நேரிடையாக சென்று வழங்கலாம். அவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகை கடிதம் மற்றும் பாராட்டு சான்றிதழ் சென்னை, அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்படும். மேலும், இவ்வாறான அரியப் பொருட்களை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தும் போது, அந்தப் பொருட்களை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும்.
எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திர போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை, அமையவுள்ள சுதந்திர போராட்ட அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கும்படி பொதுமக்களுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu