கரூரில் மனைவியைக் கொன்றுவிட்டு, கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கரூரில் மனைவியைக் கொன்றுவிட்டு, கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
X

உயிரிழந்த சுப்பிரமணியன், அவரது மனைவி சின்னப்பொன்னு.

கரூரில் மனைவி தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து பழைய துணி வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.

கரூரில் மதுபோதையில் மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று விட்டு ரயில் முன் பாய்ந்து கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கரூர் காந்திகிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் பழைய துணி வியாபாரி. இவருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வேலைக்கு சென்றுவிட்டு வந்த சுப்பிரமணி மதுபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுப்பிரமணியத்துக்கும் அவரது மனைவி சின்னபொன்னுவுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் சுப்பிரமணி மனைவியின் தலையில் கல்லை தூக்கிப் போட்டுள்ளார், இதில் பலத்த காயமடைந்த சின்னப்பொண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து, வீட்டிலிருந்து கிளம்பிய சுப்பிரமணி அருகிலிருந்த கரூர் திண்டுக்கல் ரயில் தண்டவாளத்தில் சென்ற ரயில் முன் பாய்ந்து உடல் நசுங்கி உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் கொலை மற்றும் தற்கொலை குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!