கரூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெள்ள நிவாரண பொருட்கள்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரண பொருட்களை கரூர் மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.
சென்னையில் மிக்ஜாம் புயலால் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. வெள்ளத்தில் சிக்கியர்களை மீட்கும் பணியானது தமிழக அரசின் சார்பில் நடைபெற்று வருகிறது. மேலும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்பவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. கலெக்டர் தங்கவேல் பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் வெ. கவிதா முன்னிலையில் அனுப்பி வைத்தார்
கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொருட்டு 5000 போர்வைகள். 5000 தண்ணீர் பாட்டில்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ உபகரணங்கள், நாப்கின் போன்ற பல்வேறு பொருட்கள் அனுப்பி வைங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், துணை மேயர் ப.சரவணன், வட்டாட்சியர்கள் வெங்கடேசன், ராதிகா மற்றும் அரசு அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu