கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி
X

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் இன்று அளிக்கப்பட்டது.

வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேடசந்தூர் அரசு ஆண்கள் நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதியில் வள்ளுவர் மேலாண்மை பயிற்சி கல்லூரி, கரூர் சட்டமன்றத் தொகுதியில் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் புலியூர் ராணிமெய்யம்மை மேல்நிலைப்பள்ளி மற்றும் செட்டிநாடு இராணி மெய்யம்மை மெட்ரிக் பள்ளி, குளித்தலை சட்டமன்றத்தொகுதியில் குளித்தலை கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, மணப்பாறை, விராலிமலை சட்டமன்றத் தொகுதி என மொத்தம் 5135 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கரூர் எம்பி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், கரூர் மாவட்ட கலெக்டருமான தங்கவேல் பேசுகையில், தேர்தல் பணியில் பட்டுள்ள அனைவரும் வாக்குச்சாடி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களை எவ்வாறு கையாளுவது, வாக்குப்பதிவுக்கு முன்னர் மாதிரி வாக்கு பதிவு வாக்கு பதிவு நடத்துவது எப்படி என்பதை இந்த பயிற்சி வகுப்பின் மூலம் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.

85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் படிவம் 12 வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிவம் பெறாமல் வரும் மற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடியில் தேவையான உதவிகளை நீங்கள் செய்ய வேண்டும். இந்த பயிறசி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை அனைவரும் பார்த்து உங்கள் பணி குறித்து மேலும் அறிந்துகொள்ளலாம் என்றார்.

மேலும் வீடியோ கான்பரென்சிங் மூலம் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பணி புரியும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் காவல்நிலையம் அருகில் வேடசந்தூர் பிரிவு சாலையில் நடைபெற்ற வாகன சோதனைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!