திமுக முப்பெரும் விழா: 270 மூத்த முன்னோடிகளுக்கு தலா 10 ஆயிரம் வழங்கல்

திமுக முப்பெரும் விழா: 270 மூத்த முன்னோடிகளுக்கு தலா 10 ஆயிரம் வழங்கல்
X

முப்பெரும் விழாவில் மூத்த முன்னோடிகளுக்கு தலா 10 ஆயிரம் வழங்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி.

திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு 270 மூத்த முன்னோடிகளுக்கு தலா 10,000 ரூபாயை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளையொட்டி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா கொண்டாடபட்டது. இந்த விழாவில் கட்சிக்காக உழைத்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த முன்னோடிகள் 270 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பொற்கிழி வழங்கி கெளரவிக்கப்பட்டது.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!