கரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர் வெற்றி

கரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு  திமுக வேட்பாளர் வெற்றி
X

வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கண்ணையனுக்கு சான்றிதழை வழங்குகிறார் தேர்தல் நடத்தும் அலுவலர்.

கரூர் மாவட்ட ஊராட்சி 8 வது வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர் கண்ணையன் வெற்றி பெற்றார்.

கரூர் மாவட்ட ஊராட்சி வார்டு 8 க்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் கண்ணையனும், அதிமுக சார்பில் முத்துக்குமார் உட்பட 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் திமுக, அதிமுக இடையே கடும் மோதல், வாக்குவாதம், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

திட்டமிட்டபடி ஊராட்சி வரிசையாக வாக்கு எண்ணாமல் மாற்றி எண்ணுவதாக அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திமுக, அதிமுக இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பும் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், சுமார் 2 மணி நேரம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை காலை 10 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் கண்ணையன் முன்னணியில் இருந்தார். தொடர்ந்து 11 சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட முன்னணியில் வாக்குகளை பெற்று வந்தார். 11 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் கண்ணையன் 18,262 வாக்குகள் பெற்றார் அதிமுக வேட்பாளர் முத்துக்குமார் 6,573 வாக்குகள் பெற்றார். இதையடுத்து திமுக வேட்பாளர் கண்ணன் 12,191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!