அன்னபோஸ்ட்டில் திமுக வேட்பாளர் வெற்றி

அன்னபோஸ்ட்டில் திமுக வேட்பாளர் வெற்றி
X

வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பிரேமா.

திமுக வேட்பாளரை எதிர்த்து நின்ற அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்கள் வேட்பு மனுவினை திரும்ப பெற்றதால் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.

கரூர் மாநகராட்சி தேர்தலில் 48 வார்டுகள் உள்ளன. இதில் 22வது வார்டு பொது பெண் வார்டாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. 22வது வார்டில் திமுக சார்பில் பிரேமா, மாற்று வேட்பாளராக கண்ணகி, அதிமுக சார்பில் வளர்மதி, மாற்று வேட்பாளராக இலக்கியா, நாம் தமிழர் கட்சி சார்பில் சோளியம்மன், பாஜக சார்பில் ஜெயலட்சுமி ஆகியோர் வேட்பு மனுவினை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வெங்கடரமணிடம் தாக்கல் செய்து இருந்தனர். இன்று வேட்பு மனு திரும்ப பெறுதல் என்பதால் திமுக வேட்பாளர் பிரேமாவிற்கு எதிராக போட்டியிட்ட மாற்று வேட்பாளர்கள், வேட்பு மனுவை திரும்ப பெற்றனர். இதனால் திமுக வேட்பாளர் பிரேமா வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாக உள்ளது. மாலை 5 மணியளவில் அதற்கான சான்றிதழ் தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
future ai robot technology