கோவை மாணவி தற்கொலை சம்பவத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்பாட்டம்

கோவை மாணவி தற்கொலை சம்பவத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்பாட்டம்
X

கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கண்டித்து ஆர்பாட்டம் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர்.

கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவையில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கண்டித்து கரூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவையில் பள்ளி மாணவி உயிரிழப்பு காரணமான பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் மாணவி புகார் அளித்தும் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவி தற்கொலை செய்து கொண்டதை கொலை வழக்காக பதிவு செய்யவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் பள்ளி சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்