கரூர் வாரச் சந்தையில் குவிந்த பொதுமக்கள் கூட்டம்

கரூர் வாரச் சந்தையில் குவிந்த பொதுமக்கள் கூட்டம்
X

காய்கறி வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

பலரும் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் குவிந்ததால் கொரனோ தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.

கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 900 தாண்டிய நிலையில் மாநகராட்சி சார்பில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்க தற்காலிக சந்தைகளை திறக்க முடிவு செய்யப்பட்டு திருவள்ளுவர் விளையாட்டு மைதானம், காந்திகிராமம் மைதானம் என பல இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு பொதுமக்கள் அதிகளவில் செல்லாத நிலை இருந்து வருகிறது.

இந்தநிலையில் கரூர் நகரில் கச்சேரி பிள்ளையார் கோவில் பகுதியில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக வாரச் சந்தைகள் கூட கூடாது என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், வியாபாரிகள் அப்பகுதியில் ஒன்று சேர்ந்து சந்தையை கூட்டியுள்ளனர். இதனால் அதிகாலை முதல் வியாபாரிகள் தரைக் கடைகளை அமைத்ததால் பொதுமக்கள் வரத் துவங்கினர்.

மேலும், நாளை ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் பலரும் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் வீடுகளுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். சுகாதாரத்துறை, காவல் துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் இருந்து கட்டுப்படுத்த தவறியதால் வழக்கத்தை விட அதிகளவிலான பொதுமக்கள் ஒன்று திரண்டு காய்களை வாங்கிச் செல்கின்றனர். கொரோனா பரவல் கால கட்டத்தில் இது போன்று அதிகளவில் ஒரே இடத்தில் கூடினால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai marketing future