கரூர் மாவட்டத்தில் இன்று 52 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

கரூர் மாவட்டத்தில் இன்று 52 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X
கரூர் மாவட்டம் முழுவதும் இன்று 52 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் இன்று 52 இடங்களில் கொரனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. கரூர் நகரில் உள்ள பழைய மருத்துவமனை வளாகம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனை, குளித்தலையில் உள்ள தலைமை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இவை தவிர மாவட்டம் முழுவதும் இன்று தடுப்பு ஊசி செலுத்தப்படும் இடங்கள் வருமாறு:

கரூர் பகுதியில் உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அய்யம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், தாந்தோன்றிமலை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், இனாம் கரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பசுபதிபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கரூர் கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதி.

குளித்தலையில் உள்ள தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கட்டடம், இனுங்கூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், அய்யர்மலை ஆரம்ப சுகாதார நிலையம், நச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையம், குளித்தலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்,

தான்தோன்றிமலை பகுதியில் உள்ள கோயம்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி, வெள்ளியணை ஆரம்ப சுகாதார நிலையம், கோடங்கிபட்டி ஆரம்ப சுகாதார நிலையம், கருப்பம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், கோவிந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், வடக்குபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், கடவூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காணியாளம்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், கடவூர் ஆரம்ப சுகாதார நிலையம்.

கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள பஞ்சப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட தாடம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பஞ்சப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், வேப்பங்குடி ஆரம்ப சுகாதார நிலையம், கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனை, உடையப்பட்டி அரசு ஆரம்பப் பள்ளி, காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சேப்பிளாபட்டி ஆரம்ப சுகாதார நிலையம்.

கா.பரமத்தி பகுதியில் உள்ள ரெங்கபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அணைப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, க. பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையம், புன்னம் ஆரம்ப சுகாதார நிலையம் கார்வழி ஆரம்ப சுகாதார நிலையம், காசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், விஸ்வநாதபுரி ஆரம்ப சுகாதார நிலையம், தும்பிவாடி ஆரம்ப சுகாதார நிலையம்,

அரவக்குறிச்சி பகுதியில் உள்ள சவுந்தரம்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஈசநத்தம் ஊராட்சியில் உள்ள சுக்காம்பட்டி அங்கன்வாடி மையம், மலைக்கோவிலூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், ஈசநத்தம் ஆரம்ப சுகாதார நிலையம், குரும்பப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலை ஒன்பது முப்பது மணி முதல் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!