கொரோனா ஊரடங்கு பாதிப்பு : 3 வேளை இலவச உணவு திட்டம்

கொரோனா ஊரடங்கு பாதிப்பு : 3 வேளை இலவச உணவு திட்டம்
X

கரூரில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவு கிடைக்காமல் சிரமப்படுபவர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கப்படுகிறது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உணவு தேவை குறித்த தெரிவிப்பவர்களுக்கு மூன்று வேளையும் வீடுகளுக்கே சென்று உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பெறப்பட்ட 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு மருத்துவ உபகரணங்களை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வட நேரேவிடம் வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில், கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரங்களை இழந்து உணவு கிடைக்காமல் அவதியுறும் பொது மக்களுக்கு உதவும் வகையில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை தொடங்கப்படுகிறது. 9498747644, 9498747699 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு உணவு தேவை குறித்து பொதுமக்கள் தெரிவித்தால், அவர்களின் இல்லங்களுக்கே சென்று மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்றார்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !