கரூரில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

கரூரில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்
X

மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில்  கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் பேசுகிறார்.

கரூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் கைத்தறி துறை ஆணையரும், கரூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், தொடர் மழை காலத்தில் பாதிப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் செய்யப்பட்ட நிவாரணங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் துறை சார்பில் மழை வெள்ள காலங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து எடுத்துக் கூறினர். பின்னர் கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் அனைத்து துறை அலுவலர்களிடையே பேசுகையில், அனைத்து துறையிலும் தொடர் மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். கடந்த காலங்களில் பெய்த மழை அளவை கருத்தில் கொண்டு, எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த தகவல்களை அடிப்படையாக வைத்து, அந்த இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வெள்ளம் வந்தால் அதைத் தடுப்பதற்கும் உடனடியாக பொது மக்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags

Next Story