கரூர் மாவட்ட குரூப் 4 தேர்வு மையங்களை பார்வையிட்ட ஆட்சியர் தங்கவேல்
ஒரு தேர்வு மையத்தினை கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பார்வையிட்டார்.
கரூர் அரசு கலைக்கல்லூரி, தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளி. வள்ளுவர் கல்லூரி, என்.எஸ்.என் கல்லூரி, பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி4,)- இன்று நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி IV) காலை 9.30 மணிக்கு தொடங்கி 99 மையங்களில் நடைபெற்றது.
தேர்வு எழுதிட உதவி தேவைப் படக்கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய ஏற்பாடு செய்திடவும், மேற்கண்ட தேர்வர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கூடுதலாக 20 நிமிடங்கள் ஒதுக்கிடவும் முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தேர்வு 89 இடங்களில் 99 மையங்களில் நடைபெற்றது. தேர்வு எழுத 25,869 நபர்கள் அனுமதிக்கப்பெற்றுள்ளனர். 58 மாற்றுதிறனாளிகள் உதவியாளர்களை கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க 7 கண்காணிப்பு குழுக்கள், 16 பறக்கும் படைகள், 99 ஆய்வு அலுவலர்கள், 99 தலைமை கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் வீடியோ பதிவு செய்ய 104 வீடியோ கிராபர்கள், பாதுகாப்பு பணியில் 131 காவலர்கள் பணியமத்தப்பட்டு இருந்தனர்.
அந்த வகையில் இன்றைய தினம் 20.787 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 6082 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu