5 மாநிலத் தேர்தல் முடிவு: கரூரில் பாஜகவினர் கொண்டாட்டம்

5 மாநிலத் தேர்தல் முடிவு: கரூரில் பாஜகவினர் கொண்டாட்டம்
X

கரூரில் பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர். 

வட மாநிலத் தேர்தல் வெற்றியை கரூர் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

உத்தரப்பிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியை, கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடினர். பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே, வெடி வைத்தும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ஆரவாரத்தோடு இருந்த பாஜகவினரின் மகிழ்ச்சி ஏராளமான மக்களின் கவனத்தில் ஈர்க்க வைத்தது. கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்றும், ஜெய் ஜெய் பிஜேபி, ஜெயித்தது பார் பிஜேபி என்றெல்லாம் முழக்கங்களிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story