பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை பாஜக முற்றுகை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடும் பாஜகவினர்.
மத்திய அரசு அண்மையில் பெட்ரோல், டீசல் விலையை அண்மையில் குறைத்தது. இதன் அடிப்படையில் தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக கரூர் மாவட்ட வர்த்தக அணி மற்றும் பட்டியல் இனத்தவர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைத்தும் தமிழகத்தில் இந்த விலையை குறைக்காத மாநில அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் மாநில அரசுக்கு எதிராக எழுப்பியவாறு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளே நுழைகின்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
உடனடியாக ஆட்சியர் அலுவலக வளாக கதவுகள் மூடப்பட்டன. இதையடுத்து பாஜகவினர் கதவு அருகிலேயே தரையில் அமர்ந்து தொடர்ந்து மாநில அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதிக்குமாறு போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 10 நபர்களுக்கு மட்டுமே போலீசார் அனுமதித்தனர்.
இதையடுத்து, பாஜக மாவட்ட நிர்வாகிகள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரிய மனுவை அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu