வாகன ஓட்டிகளுக்கு விபத்தை தவிர்க்க விழிப்புணர்வு செயல் விளக்கம்

வாகன ஓட்டிகளுக்கு விபத்தை தவிர்க்க விழிப்புணர்வு  செயல் விளக்கம்
X

நிகழ்ச்சியில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கிறார் மருத்துவ பணியாளர்

விபத்தின்போது, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த செய்முறை விளக்கத்தை மருத்துவ பணியாளர்கள் அளித்தனர்

கரூரில் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் முதலுதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்றது.

கரூர் நகரில் இயங்கி வரும் சுற்றுலா வேன், டாக்ஸி வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம், சாலை விபத்துகளை தவிர்ப்பது குறித்து, கரூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் விளக்கமளித்தார்.

மேலும், எதிர்பாராத வகையில் ஏற்படும் விபத்துகளின் போது, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த செய்முறை விளக்கத்தை மருத்துவ பணியாளர்கள் அளித்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
deepfake ai tool