கரூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மவுன நாடகம் மூலம் விழிப்புணர்வு

கரூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மவுன நாடகம் மூலம் விழிப்புணர்வு
X

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற மவுன நாடக விழிப்முணர்வு நகழ்ச்சி.

கரூர் போக்குவரத்து போலீசார் சார்பில் மவுன நாடகம் மூலம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில் இன்று விபத்தில்லா வாகனம் ஓட்டுவது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்றது.

இதில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் குறித்து மவுன நாடகக் கலைஞர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதில் சுமார் 100 மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கரூர் நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ், கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!